மேல் மாகாண சபையின் புதிய சபைச் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விஷேட தர உத்தியோகத்தரான திரு. ரோஹண ராஜபக்ஷ அவர்கள் (2019 ஆகஸ்ட் 26 ஆந் திகதி) கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலக்கம் 204,டென்ஸில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்லையில் அமைந்துள்ள மாகாண சபை காரியாலய கட்டடத் தொகுதியில் 11 ஆவது மாடியில் அமைந்துள்ள சபைச் செயலாளர் காரியாலயத்தில் இந்த கடமையினை பொறுப்பேற்கும் வைபவம் நடைபெற்றது.
இச் சந்தர்ப்பத்தில் மேல் மாகாணத்தின் பிரதம செயலாளர் திரு. பிரதீப் யசரத்ன உள்ளிட்ட மேல் மாகாண சபையின் மற்றும் சபைச் செயலாளர் காரியாலயத்தின் உத்தியோகத்தர்களும் மற்றும் பணிக் குழுவின் அங்கத்தவர்களும் திரு. ரோஹண ராஜபக்ஷ அவர்களினது நண்பர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




