மேல் மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

மேல் மாகாண சபை, இலங்கை

மேல் மாகாண சபைச் செயலாளர் காரியாலயம்

“மேல் மாகாண சட்டமன்றத்தை கௌரவத்துடன் முன்னெடுத்துச் செல்லுதல்”

இலங்கை அரசியலமைப்பு மற்றும் 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்திற்கு இணங்க மாகாண சபையின் சட்டமன்றப் பணிகளையும் சபை நடவடிக்கைகளையும் முன்னெடுத்தல்.

வரவேற்பு

மேல் மாகாண சபைச் செயலாளர் காரியாலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு மற்றும் 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின்படி, மாகாண அபிவிருத்திக்கான சட்டமன்றப் பணிகளையும் சபைக் கூட்டங்களையும் முன்னெடுப்பது எமது பிரதான பணியாகும்.

கௌரவ சபை உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் பக்கச்சார்பற்ற, வெளிப்படையான மற்றும் வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றோம்.

எமது தொலைநோக்கு

“மேல் மாகாண சட்டமன்றத்தை கௌரவத்துடன் முன்னெடுத்துச் செல்லுதல்”

எமது பணி

“மேல் மாகாண சட்டமன்றத்தை வலுவாகப் பேணுவதற்காக மக்கள் பிரதிநிதிகளுக்குத் தேவையான சேவைகளையும் விடயதானப் பங்களிப்பையும் திறம்படவும் நடுநிலையாகவும் வழங்குதல் மற்றும் சட்டமன்ற நடைமுறைகளுடன் தொடர்புடைய பணிகளைச் சிறப்பாக நிறைவேற்ற ஒழுக்கமான, தொழில்முறை ஊழியர்களை நிர்வகித்தல்.”

செய்திகள் மற்றும் அறிவித்தல்கள்

அனைத்துச் செய்திகளும்