// அறிமுகம்

சபை

அறிமுகம்

மாகாண சபையின் நோக்கம்

 

அண்மைய வராலாற்றில் எங்களது நாட்டில் இடம்பெற்ற அதிகாரப் பரவலாக்கலில் சிறப்பான சந்தர்ப்பம் ஒன்றாக மாகாண சபை முறை ஆரம்பித்ததை சுட்டிக் காட்ட இயலும்.  இம் முறை ஆரம்பிப்பதற்கு முன்னர் மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்திலான தாபனங்களுக்கு இருக்காத, எனினும் மத்திய அரசுடன் காணப்பட்ட சட்டத்துறை, நிர்வாகத் துறை, நீதித் துறை அதிகாரங்களில் ஒரு பகுதியை மாகாண மட்டத்தில் ஸ்தாபிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட மாகாண சபை என்ற ஜனநாயகத் தாபனம் ஒன்றுக்கு பகிர்ந்தளிப்பதே இம் முறையை அறிமுகப் படுத்தியதன் பிரதான நோக்கம் ஆகும்.

 

இம் மாகாண மட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை முறை மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டதுடன், இதன் மூலம் மாகாண அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன்புரி நடவடிக்கைகளுக்காக விஷேட செயற்பாடுகளை மேற்கொள்வது எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

மாகாண சபையை ஸ்தாபித்தல்

 

1978 ஆம் ஆண்டின் இலங்கை சனநாயகசோசலிசக் குடியரசு அரசியல் அமைப்பிற்கு 1987 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் மூலம் அரசியல் அமைப்பு ஏற்பாட்டின் கீழ் 154 அ பிரிவின் 8 ஆவது அட்டவணையில் காட்டப்பட்டுள்ள 9 மாகாணங்களில் 8 மாகாண சபைகளை ஸ்தாபிக்கும் சட்டரீதியான அதிகாரம் ஏற்படுத்தப்பட்டது.

 

இதற்கிணங்க, 1988 ஆம் ஆண்டு இலங்கையின் பிரதேச நிர்வாகத்தில் பாரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தி மாகாண சபை முறை ஆரம்பமாகியது,

 

அதுவரைக்கும் நாட்டில் ஒரே ஒரு சட்டத்துறையாகக் காணப்பட்ட பாராளுமன்றம் தேசிய மட்டத்தில் சட்டத்துறையாகவும், மாகாண சபை உப தேசிய மட்டத்தில் சட்டத்துறை ஒன்றாகவும் நடைமுறைப் படுத்துவது மாகாண சபை ஆரம்பத்துடன் இடம் பெற்றது.

 

மாகாண சபை ஒன்றிற்கு உரிய சட்டத்துறை தொடர்பான அதிகாரங்கள்

 

நாட்டின் உச்சமான சட்டம் ஒன்றான அரசியல் அமைப்பு ஏற்பாட்டின் கீழ் அம் மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்கு உரியதாக மாகாண சபை நியதிச் சட்டங்களை தயாரிக்கும் அதிகாரம் அரசியல் அமைப்பின் 154(எ) பிரிவின் மூலம் மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாகாண சபை உறுப்பினர் ஒருவராவதற்கு

ஏதாவது நபர் ஒருவர்,