// மேல் மாகாண மாகாண சபை

0.1 செங்கோல்

0.2 அறிமுகம்

0.3 சபையின் நடவடிக்கை

செங்கோல்

கௌரவ தவிசாளரின் அதிகாரம் தொடர்பான  அடையாளமாகத் தற்போது  செங்கோல் மேல் மாகாண சபைக் ௬ட்டத்தில் பயன்படுத்தப்படுகின்றது. செங்கோல் இல்லாத சபைக் ௬ட்டமானது முறையான ௬ட்டமாகக் கருதப்பட மாட்டாது. விஷேடமாக தவிசாளரைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தில் செங்கோல் மேசைக்கு  மேல் இருக்க வேண்டும்.  கௌரவ தவிசாளர் ஆசனத்தில் அமர்ந்திருக்கும் போது சபை ௬டியிருக்கும் போதும் செங்கோலின் உச்சி ஆளுங் கட்சியின் பக்கத்திற்கு இருக்குமாறு செங்கோல் சபை மேசையின் மேல் வைக்கப்பட வேண்டும்.

மேல் மாகாண சபையின் செங்கோலானது பாராளுமன்றத்தின் செங்கோலிற்குச் சமமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் கீழிருந்துமேலாக அமைப்பைக் கருதும் போது செங்கோல் ஆரம்பமாகும் இடம் தாமரைப் பூ ஒன்றின் வடிவத்திற்கு சமமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இது தூய்மையை பிரதிபலிப்பதுடன் இது முழுமையாக தாமரைப் பூ ஒன்றினைக் கொண்ட வடிவத்திற்கு ஒத்ததாகவே காணப்படுகின்றது.

செங்கோல் கையினால் பிடிப்பதற்கு ஏற்ற முறையில் கருங்காலி மரத்தினால் செய்யப்பட்டதொன்றாகும். கருங்காலி என்பது இலங்கைக்கே உரித்தான சிறப்பான மரவகை ஒன்றாகுவதுடன், அது சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.  இதன் ஆரம்பம் தொடக்கம் இறுதி வரையான அடையாளங்கள் தங்கமுலாம் பூசப்பட்டுள்ளன. நடுவிலும் அவ்வாறான ஆக்கங்கள் காணப்படுகின்றன.

அடுத்ததாக மாவட்டத்திற்காக அதாவது மேல் மாகாணத்தின் மூன்று மாகாணங்களையும் கொண்டதை நிரூபனம் ஆகுமாறு மூன்று உயிரினங்களைக் கொண்ட அடையாளங்கள் காணப்படுகின்றன அதில் கொழும்பு மாவட்டம் நிருபனமாகுமாறு கசை ஏந்திய சிங்கமும், கம்பஹ மாவட்டம் நிருபனம் ஆகுமாறு மூன்று தலை நாகமும், களுத்துறை மாவட்டம் நிருபனம் ஆகுமாறு பறவை உருவமும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்தின் செங்கோலின் வடிவத்தைக் கருத்தில் கொள்ளும்  போது அதன் நீளம் 48 அங்குளம் ஆகும். பயன்படுத்தப்பட்டுள்ள கனிய வளங்கள் வெள்ளி நூல் ஆகும். கருங்காலி மரத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள அடிப் பாகத்தின் பகுதி 18 கேஷ் தடிப்பைக் கொண்ட வெள்ளியைப் பயன்படுத்தி  தயாரிக்கப்பட்டுள்ளது. நிர்மாணிக்கப்பட்ட வேளையில் (1998 ஜனவரி 27 ஆந் திகதி) இதன் மொத்தப் பெறுமதி275,000.00 ஆகும்.

நாங்கள் நீண்டகால வரலாற்றைக்கொண்ட ஒழுக்கமுள்ள இனம் ஆகிய படியால் சந்திர, சூரிய அடையாளங்கள் மட்டுமல்லாது பழைய அலங்கார மற்றும் அடையாளங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அம்சங்களை மட்டும் பயன்படுத்தி சபைக்கு கிராம நற்பன்பு ஒன்று ஏற்படுமாறு முறையில் மேல் மாகாண சபையின் செங்கோல் இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ளது.

இச் செங்கோல் கலாசூரிய விமல் சுனேந்திர அவர்களினால் நிர்மாணிக்கப்பட்டது. மேல் மாகாண சபையின் செங்கோலைத் தயாரிக்கும் குழுவின் அங்கத்தவர்களாக பேராசிரியர் மென்திஸ் ரோஹனாதீர அவர்களும், வணக்கத்துக்குரிய ஹந்து பெல்பொல மஹிந்த தேரர் அவர்களும், திரு. சிறிமல் லக்துசிங்ஹ அவர்களும், கலாசூரிய எச்.ஜீ. சால்ஸ் அவர்களும் மற்றும் திரு. தயா வணிகதுங்க அவர்களும் இடம்பெற்றிருந்தனர்.

 

அறிமுகம்

1987 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 13ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு இணங்க இலங்கையில் ஏதாவது மாகாணத்தில் ஸ்தாபிக்கப்பட்ட மாகாண சபை ஒன்று என்பது அம் மாகாணத்தில் மாவட்ட மட்டத்தில் அங்கத்துவம் பெறுமாறு மக்கள் தேர்தலில் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டதும். சனநாயக உரிமைக்கு மதிப்பளிக்கும் சட்டத்துறை தொடர்பான நிறுவனம் ஒன்றாகும்.

மேல் மாகாண மாகாண  சபையின் முதலாவது மாகாண சபை 1988 ஆம் ஆண்டிலும், இரண்டாவது மாகாண சபை 1993 ஆம் ஆண்டிலும், மூன்றாவது மாகாண சபை 1999 ஆம் ஆண்டிலும். நான்காவது மாகாண சபை 2004 ஆம் ஆண்டிலும் ஸ்தாபிக்கப்பட்டன.

மேல் மாகாண மாகாண சபை கொழும்பு, கம்பஹ, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்தும் தெரிவு செய்யப்படும் 102 உறுப்பினர்களையும் மற்றும் மேலதிக போனஸ் ஆசனங்கள் இரண்டாக நியமிக்கப்படும் உறுப்பினர்களையும் கொண்டதாகும்.

நிலப் பிரதேசத்தில் சிறிய மாகாண சபை ஆகிய போதும் அங்கத்தும் வகிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பார்க்குமிடத்து அது நாட்டின் ஏனைய மாகாண சபைகளுக்கு இடையே முன்னுரிமை பெறுவதுடன் இந் நாட்டில் காணப்படும் எல்லா ஜனநாயக மக்கள் பிரதிநிதித்துவ தாபனங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து இலங்கை பாராளுமன்றத்தின் அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு மட்டுமே அது இரண்டாவதாக காணப்படுகின்றது.

இலங்கை பாராளுமன்ற வரலாற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து மேல் மாகாண மாகாண சபையின் அங்கத்தவர்களின் எண்ணிக்கை இலங்கையின் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது பாராளுமன்றங்களின் எண்ணிக்கையை விட அதிகமாக காணப்படுகின்றது.

அதேபோல் இந்த மாகாண சபையின் அதிகார பிரதேசத்தினுள் மக்கள் எண்ணிக்கையைக் கருதுமிடத்து முழு இலங்கையின் சணத்தொகையில் 28% சதவீத அளவினை அங்கத்துவப் படுத்தியும் நாட்டின் நிர்வாக தலைநகரங்கள் மற்றும் அத்துடன் வர்த்தக தலைநகரங்கள் உள்ளிட்ட பிரதான பல நகரங்கள் அமைந்திருப்பதும் இங்கு பல இன, பல மத, நகர மற்றும் கிராமிய மக்கள் வாழ்வதன் காரணமாக, ஏனைய மாகாண சபைகளை விட மேல் மாகாண சபை சிறப்பான நிலைமை ஒன்றை பெறுகின்றது என்பது தெரியவருகின்றது.

மாகாண சபை நடவடிக்கை தவிசாளரின் தலைமையில் இடம்பெறுகின்றது பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு சமமான நடவடிக்கை ஒழுங்கு விதிகளின் மூலம் சபையின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

சபை நடவடிக்கை

பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு சமமாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க் கட்சிக் குழுக்களுக்கு இடையே கலந்துரையாடல் மற்றும் விவாதத்தின் மூலம் இணக்கத்திற்கு வரப்பட்டு, மாகாண சபையின் தேவைகள் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படுகின்றது.

மாகாண சபையின் விடயங்களை பின்வருமாறு சுருக்கமாக குறிப்பிட இயலும்.

அரசியல் அமைப்பின் மூலம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு உரியதாக குறித்தாக மாகாணத்தின் பல்வேறுபட்ட தேவைகளை மேற்கொள்ளல் மற்றும் நிர்வாகத் தேவைகளுக்கு சட்டங்கள், நியதிச் சட்டங்களை நிறைவேற்றுதல்.

மாகாண நிதி நிர்வாகத்துக்கு உரியதான மாகாண சபையின் வருடாந்த நிதிக் ௬ற்றினை விவாதித்து நிறைவேற்றுதல்.

மாகாணத்தின் பல்வேறுபட்டதேவைகள் மற்றும் நிர்வாகத்திற்கு உரியதான பிரேரணைகள் மற்றும் கருத்துக்களை முன்வைத்து விவாதிப்பதன் மூலம் தீர்மானங்களுக்கு வருதல்.

மாகாணத்தின் நிறைவேற்று அதிகாரம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் தொடர்பாக எழும் விடயங்கள் சம்மந்தமாக அமைச்சர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு உரியதான வினாக்களை வினவுதல், அதன் மூலம் அவர்களின் அதிகாரத்தின் கீழ் காணப்படும் விடயங்கள் தொடர்பாக சரியான நடவடிக்கை ஒன்று எடுப்பதைக் கவனத்தைக்கொண்டு வருதல்.

மாகாண சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பாக மற்றும் ஒருங்கிய பட்டியலுக்கு உரிய விடயங்களுக்கு உரியதாக பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்படும் சட்ட நகல் பிரதி தொடர்பாக மாகாண சபையில் கலந்துரையாடி தீர்மானத்தினை ஜனாதிபதிக்கும் / பாராளுமன்றத்திற்கும் அனுப்புதல்.

பொதுவாக தேசிய கொள்கைக்கு இணங்கியதாக மாகாணத்திற்கு உரிய பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக மாகாண மக்களினால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அங்கத்தவர்களினது கலந்துரையாடல் சபை ஒன்றாக செயற்படுதல்.

மேலே உள்ள விடயங்களை நிறைவேற்றும் போது மாகாண சபை  செயற்பட வேண்டிய முறை தொடர்பாக சட்டரீதியான வழிகாட்டல் மற்றும் வரையரைகள் 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தில் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தில் காட்டப்பட்டுள்ளன. இதை விட மேல் மாகாண மாகாண சபை செயற்படவேண்டிய முறை தொடர்பான ஒழுங்கான வழிகாட்டல் ஒன்று சபையினால் நிறைவேற்றப்பட்டுள்ள நடவடிக்கை ஒழுங்கு விதித் தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.